
சென்னை: சென்னை சேத்துபட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா வில்டன். இவர், கடந்த ஒன்றாம் தேதி தனது தோழிகளுடன் பழைய மாமல்லபுரம் சாலையில் சொகுசு காரில் சென்றபோது, முனுசாமி என்ற கூலித் தொழிலாளி மீது கார் மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான ஐஸ்வர்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஐஸ்வர்யா சார்பில் வக்கீல் லிட்டா சீனிவாசன், சென்னை செஷன்ஸ் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, 4வது முறையாக ...