
சென்னை: மைத்துனரை கொலை செய்த வழக்கில் கறிக்கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடபழனி என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (23). அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், கார்பென்டர். இவரது சகோதரியும் தமீமுன் அன்சாரியும் காதலித்து கடந்த 2012 மார்ச் 16ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தமீமுன் அன்சாரி மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக, வீட்டுச் செலவுக்கு பணம் தருவதில்லை. எனவே, கோபித்துக் கொண்டு அவரது மனைவி தனது ...