
சென்னை: பணி நியமன ஆணை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் 80 பேர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த உதவி பேராசிரியர் ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 13 உறுப்பு கல்லூரிகள் கடந்த 1.8.2012 முதல் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. அதுமுதல் 13 உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் 557 உதவி பேராசிரியர்கள், இணை ...