
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், கெல்லீசில் உள்ள அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33வது சிறுவனையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 73 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 33 சிறுவர்கள் கடந்த 11ம் தேதி கூர்நோக்கு இல்லத்தின் ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பினர். இவர்களில் 32 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ...