
சென்னை: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மனைவி கோமதி (26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர், டிரான்ஸ்-ஜகுலர் லிவர் பயாப்ஸி பரிசோதனை செய்தனர். அதில், அவரது கல்லீரல் முற்றிலும் சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையில் கோமதி திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டார். ஒரு சில மணி நேரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் அவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று ...