
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணையில் இருந்து 2 ஆப்பிரிக்காவின் நீண்ட வாய் முதலைகள், இன்று மாலை விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்படுகிறது. சென்னை முதலை பண்ணையில் 17 வகையான 1800 முதலைகள் உள்ளன. ஆப்பிரிக்க இன நீண்டவாய் பெண் முதலைகள் 4 உள்ளன. இவை 1999ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டவை. இதில் இரண்டு முதலைகள்தான் அகமதாபாத் செல்கின்றன.இந்நிைலயில் விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏர் இந்தியா விமான நிறுவனம், 2 முதலைகளையும் அகமதாபாத் கொண்டு ...