
சென்னை: நிலுவை தொகையை வழங்காவிட்டால் திட்டப்பணிகள் அனைத்தையும் நிறுத்தப் போவதாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1000 கோடிக்கு மேல் உள்ளதாகவும், இந்த தொகை அனைத்தையும் தங்களுக்கு பாக்கி இல்லாமலும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவ்வாறு வழங்காவிட்டால் இனிமேல் எந்த ஒப்பந்தங்களிலும் பங்கேற்க போவதில்லை என்றும், அதோடு மட்டுமல்லாமல் திட்டப்பணிகள் அனைத்தையும் நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ...