
சென்னை: மழலையின் வாயில் மது ஊற்றப்படும் கொடுமை அரங்கேறியிருப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பால் மனம் சாராத குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி ரசிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் உச்சக்கட்ட கொடுமை குழந்தையின் தந்தையே மதுவை ஊற்றுவது தான். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி இதுபோன்ற செயல்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பான செய்தி ...