
சென்னை: ஆடி கார் ஐஸ்வர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 வாரத்துக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி ஐஸ்வர்யா கையெழுத்திட உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சென்னை தரமணி அருகே கடந்த மாதம் 2-ம் தேதி அதிகாலை குடிபோதையில் ஆடி காரை ஒட்டி வந்த மூன்று பெண்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது பயங்கரமாக மோதினர். இந்த சம்பவத்தில் முனுசாமி (48) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆடி காரை இயக்கி வந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் தொழில் அதிபரின் மகள் என்றும் தெரிய வந்தது. இதனையடுத்து, ...