
சென்னை: அனகாபுத்தூர் அருகே அடையாற்றில் 5 கோடியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு பேரவையில் திமுக உறுப்பினர் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தினார்.பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் பேசியதாவது: திமுக ஆட்சியில் அடையாற்றில் அனகாபுத்தூர் பகுதியில் 5 கோடியில் மேல்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கி 80 சதவீத பணிகள் முடிந்தன. அந்த பணி 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே அந்த பணியை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இணைப்பு ...