
சென்னை : சென்னை திருவான்மியூரில் மின்சார ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் அரைமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை வேளச்சேரிக்கு புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று திருவான்மியூர் வந்த போது அதில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. ரயில் சக்கரத்தில் சிக்கியிருந்த துணியில் தீப்படித்ததால் புகை மூட்டம் நிலவியது. இதனை அறிந்த ரயில் நிலைய ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தால் கடற்கரை - வேளச்சேரி மார்கத்தில் சுமார் அரைமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ உடனடியாக ...