
சென்னை: சர்வதேச புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் உலக தரத்திலான கேமரா கண்காட்சி தொடங்கப்பட்டது. ஓவியர் ஸ்ரீதர் இந்த கண்காட்சி ஏற்பாடுகளை செய்துள்ளார். 19ம் நூற்றாண்டில் இருந்து தற்போதைய அதிநவீன கேமராக்கள் வரை 1000க்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். உலகின் மிகப்பெரிய கேமராவான மமூத் முதல் மிக சிறிய 11 கிராம் எடையுள்ள கேமரா வரை பலவகையான கேமராக்களை ஸ்ரீதர் காட்சி படுத்தியுள்ளார். கண்காட்சியை ஆச்சரியத்துடன் கண்டுகளித்ததாக ...