
சென்னை : தமிழகத்தில் வெயில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் நிலையில், கடல் மட்டத்தில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால் 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, மதுரையில் நேற்று 102.2 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100.4 டிகிரி வெயில் நிலவியது. மேலும், காற்றில் ஈரப்பதம் இல்லாமல் ...