
சென்னை : தாம்பரம் விமான படை தளத்தில் இருந்து மாயமான விமானம் பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது என மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கூறினார். மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் பாம்ரே, நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி, 29 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற ஏஎன் 32 ரக ராணுவ விமானம் திடீரென மாயமானது. கடலோர படையின் கப்பல்கள், விமானங்கள், இந்திய விமானப்படை விமானங்கள், போர் கப்பல்கள் ...