
சென்னை : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டவுடன் தமிழகத்தில் தேர்தல் நடத்த எல்லா பணிகளும் முடிந்து அதை வெற்றிகரமாக நடத்த ஆணையம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். சட்டசபை தேர்தல் குறித்து ெபாதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மற்றும் நடிகை, நடிகர்கள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி, நேற்று காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் வாக்களிக்கும் முறைகள் ...