
சென்னை: கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் அவ்வப்போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறது. தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முன்வரவில்லை. இந்தநிலையில், காவிரி பிரச்சனையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், திமுக விவசாய அணி, தமிழக விவசாயிகள் சங்கம், ஏரி ...