
சென்னை: கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நாமினேஷன் டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறையில் அவசர கால பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் கடந்த 2007ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அமைச்சர் குடியிருப்பு முதல் அரசு அலுவலகங்களில் சேதமடைந்த மேற்கூரை, கான்கிரீட் சுவர் உள்ளிட்ட சிறப்பு பணிகள், மருத்துவ கட்டிடங்களின் சிறப்பு பணிகளுக்கு நியமன அடிப்படையில் ...