சென்னை: 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி ஏ.எஸ்.பி. அருண் சக்திகுமார் மதுரை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். கமுதி ஏ.எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய், மதுரை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜுக்கு சேலம் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஊரக ஏஎஸ்பி தீபா கனிகருக்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ...
↧