
சென்னை: தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இல்லங்களில் முதியோருக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அரசு நிதியுதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இல்லங்களில் முதியோருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டடம் பழுந்தடைந்துள்ளதால் ரூ.2 ...