
சென்னை: அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்கு அரசு இதுவரை செவிசாய்க்காததால் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரேஷன்கடை ஊழியர்கள் என பல தரப்பட்ட அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், அரசு பணிகள் முற்றிலும் முடங்கின. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என எந்த சங்கங்களையும் ...