
தாம்பரம், : சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அதிக மின்சாரம் பயன்பாட்டால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக குடியிருப்பில் உள்ளவர்கள் பழைய ரயில்வே சட்டத்தில் உள்ளதுபோல் 2 மின்விசிறி மற்றும் 3 மின்விளக்குகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மேலும், குளிர்சாதன பொருட்கள், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றிற்கு கூடுதலாக மின்சாரம் எதுவும் பயன்படுத்தக்கூடாது என தாம்பரம் ரயில்வே மின்சார துறையினர் கடந்த ஒரு மாத காலமாக கட்டுப்பாடு விதித்திருந்தனர். எனவே, இந்த ...