
சென்னை : சுகாதாரத் துறையின் தொடர் மெத்தனப்போக்கால் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இதுவரை 11 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள மணலி பகுதியில் ஒரு பெண் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துள்ள சம்பவம், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு பொதுமக்களிடையே பெரும் பீதியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டம் தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை அந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகள்தான் அதிகம். அதே சமயம் ...