
துரைப்பாக்கம் : வீட்டின் சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது, ஒரு எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது துரைப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையை சேர்ந்தவர் சிவா (50). இவரது மனைவி கல்பனா சிவா (45). இவர், தி.நகரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலம் சென்னை அடுத்த நீலாங்கரை சந்திப்பு சாலை 2வது தெருவில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனாவின் பெற்றோர் வாங்கியுள்ளனர். பின்னர் மேற்கண்ட நிலத்தை ...