
கொருக்குப்பேட்டை : சென்னை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மலைபோல் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் பீதியில் மக்கள் உள்ளனர். இதுபற்றி பலமுறை புகார் செய்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் மக்கள் சாட்டினர். சென்னையை சிங்கப்பூர் போல மாற்றப்போவதாக கூறி தம்பட்டம் அடித்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. ஆனால், இதுவரை குப்பை அகற்றுவதில் கூட, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் திணறி வருகிறது. குப்பை அகற்றுவதற்காக வீடு வீடாக ...