
சென்னை : கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்துதான் வாழ்கிறேன் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். சவுந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பேறுகாலத்துக்காகச் சொந்த வீட்டுக்கு வந்த சவுந்தர்யா, பிறகு அஸ்வின் வீட்டுக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ...