
தண்டையார்பேட்டை : சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மினி பார்டி ஹால் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான திருமண மண்டபங்கள் மற்றும் மினி பார்டி ஹால்களில் பார்கிங் வசதி இல்லை. சில திருமண மண்டபங்களில் மட்டும்தான் பார்கிங் வசதி உள்ளது. இதனால், இங்கு வருவோர் சாலையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்தும் நிலை உள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், திருமண வீட்டாரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் உள்ள பொரும்பாலான திருமண மண்டபங்களில் பார்கிங் வசதி இல்லை. ...