
சென்னை : தமிழகம் முழுவதும் சுமார் 42,970 ஆயிரம் சத்துணவு மையங்கள் மற்றும் 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சத்துணவு அமைப்பாளர்கள் 18 ஆயிரம் பேர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதையடுத்து காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தால் தமிழகம் முழுவதும் சத்துணவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...