
சென்னை : பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:« சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு ரூ.3 கோடி செலவில் தனியே விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடி செலவில் மாணவியர் விடுதி கட்டப்படுகிறது.«துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ...