
திருவொற்றியூர் : எர்ணாவூர் பஸ் நிறுத்த இடத்தை ஆக்கிரமித்து, அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதால் வெயில், மழையில் பயணிகள் சாலையோரம் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பழுடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு முன் அந்த இடத்தை அதிமுகவினர் ஆக்கிரமித்துக் கொண்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டுக்கு உட்பட்ட எர்ணாவூரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இங்கு வந்துதான் கத்திவாக்கம் செல்வார்கள். புதிதாக கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த நிழற்குடை ...