தாம்பரம்:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹூமோதெரபி சிகிச்சை செய்யும்போது தங்களது தலைமுடிகளை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘விக்’ தயாரிக்க தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கும் நிகழ்ச்சி, கல்லூரியின் தொழில்நுட்ப துறை சார்பில் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் தலைமுடிகளை தானமாக வழங்கினர். நிகழ்ச்சியில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சவுந்தரவல்லி ஹாரிஸ், பெலிசியா ஜேக்கப் மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் ...
↧