
பெரம்பூர்: கொடுங்கையூரில் மாநகர பஸ்களின் கண்ணாடி மற்றும் கடைகளை உடைத்த இந்து முன்னணி பிரமுகர்கள் 4 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 22ம் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம் காரனோடை நோக்கி புறப்பட்ட மாநகர பஸ், வியாசர்பாடி சர்மா நகர் அருகே சென்றபோது, பைக்குகளில் வந்த ஒரு ...