
பெரம்பூர்: கொருக்குப்பேட்டையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்க தலைவர் திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கடத்தினார்களா? என விசாரித்து வருகின்றனர். கொருக்குப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் வேலு (45). இவரது மனைவி சுமதி (38). தம்பதிக்கு மணிகண்டன் என்கிற மகனும், நதியா என்கிற மகளும் உள்ளனர். கடந்த வாரம் அண்ணாநகரில் நடந்த குடியிருப்போர் நலச்சங்க தேர்தலில் வேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்ற வேலு இரவு வீடு திரும்பவில்லை. ...