
சென்னை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 30 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தியாகிறது. இந்தியாவில் பால் உற்பத்தியில் தமிழகம் 4 வது இடம் வகிக்கிறது. ஆவின் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு வெறும் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பால் உற்பத்தியாளர்களின் தேவைபோக மற்ற வற்றை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் பால்நிறுவனங்களின் பாலும் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களில் கர்நாடக மாநில பால் ...