
அம்பத்தூர்: கொரட்டூர் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் சுரங்கப்பாதை பணிகளால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் உள்ளது. தினமும் 135 மின்சார ரயில்கள் இந்த வழியாக இயக்கப்படுகின்றன. கொரட்டூர், வெங்கட்ராமன் நகர், தில்லை நகர், அக்ரகாரம், சுப்புலட்சுமி நகர், சிவலிங்கபுரம், அன்னை நகர், லேக் வியூ ...