
சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் 4,748 பேரும், 2ம் நாளில் 6,433, 3ம் நாளில் 31,726 பேரும், 4ம் தேதி 22,469 பேர் மனு தாக்கல் செய்தனர். கடந்த 4 நாளில் மட்டும் 65,376 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இந்தநிலையில், 5வது நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 666, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 7128, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 31,114 , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,12,794 , மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 1433 , நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 3982, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ...