
சென்னை : தமிழக மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் வருகிற 17ம் தேதி மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களில் மக்கள் வாக்களித்து, தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களைச் சில இடங்களில் ஏலம் விட்டு நிரப்பிட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை தடுப்பதுடன், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ...