
தாம்பரம்: குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் மோசஸ் (45), தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மகள் ஜெனிபர் (18) கல்லூரியில் படிக்கின்றார். நேற்று, வீட்டின் அருகேயுள்ள ஒரு கடையில் தயிர் பாக்கெட் வாங்கி வந்து தந்தையும், மகளும் சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுள்ளனர். மீதி இருந்த தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றியபோது பாக்கெட்டில் அழுகிய நிலையில் அட்டை பூச்சி இருந்ததால் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ...