
சென்னை : அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தயும் அவற்றை கண்டுகொள்ளாத 746 பள்ளிகளுக்கு இனியும் அங்கீகாரம் நீட்டிக்க மாட்டோம். மே 31ம் தேதியுடன் அவை இழுத்து மூடப்படும். அதை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசு விதிகளின்படி அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக் பள்ளிகள் 2016 மே மாதம் 31ம் தேதி வரை செயல்பட தமிழக பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ...