
சென்னை : போயஸ் கார்டனுக்கு வந்த ஐவர் அணியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுத்தார். ஐவர் அணி உள்பட 14 பேருடன் அவர் போனில் மட்டுமே பேசி, அனுப்பி வைத்தார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஐவர் அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்டோர் சீட் வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஐவர் அணியை சேர்ந்தவர்களின் பதவிகளும் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்த நிலையில், ...