
சென்னை : பேரிங்குகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எஸ்கேஎப் பேரிங் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சீன தயாரிப்புகளை விற்பனை செய்வதாக எஸ்கேஎப் பேரிங் நிறுவனத்தின் அதிகாரி பல்லவ குப்தா சென்னை போலீசில் புகார் செய்தார். புகாரின்படி, விசாரணை நடத்திய வீடியோ பைரசி பிரிவு போலீசார் பாரிமுனை பகுதியில் திடீர் சோதனை நடத்தி, சில கடைகளில் எஸ்கேஎப் பிராண்ட் பெயரில் போலி பேரிங்குகளை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். 9,272 போலி பேரிங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம்.இதையடுத்து, பேரிங்குகளை விற்பனை செய்யதாக சந்தோஷ்குமார் ...