
சென்னை : வெளிநாடுகளில் இருந்து சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல், குருவிகள் மூலம் சென்னைக்கு பெரிய அளவில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா விமானத்தில் மதுரையை சேர்ந்த ஜெயந்தி (35) என்ற இளம்பெண், தனது உள்ளாடை, சூட்கேஸ், கைப்பை ஆகியவற்றில் ₹2 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்க ...