
வேளச்சேரி : பள்ளிக்கரணை கண்ணம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் (42). இவரது நண்பர் கிஷோர் (43). இருவரும், போரூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியர்கள். கடந்த 5ம் தேதி இரவு நண்பர் கிஷோருடன் பைக்கில் வெளியே சென்றுவிட்டு, ராஜீவ் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பைக்கை கிஷோர் ஓட்டினார். வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் பைக் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஓவர்டேக் செய்ய முயன்றார் கிஷோர். திடீரென வேகத்தை அதிகரித்ததால் பின்னால் இருந்த ராஜீவ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ...