
திருவொற்றியூர் : மணலி புதுநகர் விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (50). இவரது மனைவி சிவகாமி. தம்பதிக்கு நர்மதா, சுகன்யா, பிரியங்கா ஆகிய மகள்ளும், சித்தூ என்ற மகனும் உள்ளனர். இதில், நர்மதாவுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. தெய்வசிகாமணி, மணலியில் உள்ள (சிபிசிஎல்) மத்திய அரசு நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற தெய்வசிகாமணி, சிறிது நேரத்தில், கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து, மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக ...