
சென்னை: சென்னையில் பகுதி சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை பார்க்க தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மையத்தின் சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரிய கிரகணத்தை சிறப்பு கண்ணாடி மற்றும் தொலைநோக்கி மூலம் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். ஒவ்வொரு முழுமதியின் போதும் சந்திரனின் நிழலானது சூரியன் மீது படாமல் மேல் வழியாகவும், கீழ் வழியாகவும் சென்று விடுகிறது. ஆனால் இந்த முழுமதியின் போது சந்திரனின் நிழலானது சூரியன் மீது முழமையாக படிந்து செல்கிறது. அந்த கரும் சந்திரனை பார்ப்பதற்காக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மையம், சென்னை ...