
பொழிச்சலூர், : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றும் அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்துக்கான சட்டமன்ற தேர்தல், மே 16ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 4ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தொடர் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரியான கலெக்டர் மேற்பார்வையின் கீழ், தாசில்தார் தலைமையில் ...