
சென்னை : பிளஸ் 2 பொது தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது. நேற்று வரை தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று முன்தினம் நடந்த ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் 9 மாணவர்கள் பிட் அடித்து சிக்கினர். நேற்று நடந்த ஆங்கிலம் இரண்டாம்தாள் தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் பிட் அடித்த மாணவர்கள் 4 பேர் சிக்கினர். அதில் நாமக்கல் 1, அரியலூர் 1, தஞ்சாவூர் 2 பேர் என பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். ...