
சென்னை : தந்தைக்கு மாதந்தோறும் ரூ.400 வழங்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மகன்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த சின்னப்பா(75), வேலூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2004ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ‘தன்னுடைய மகன்கள் சண்முகம், மணி ஆகியோர், வயதான எனக்கும் என் மனைவிக்கும் வாழ்வாதார ஊதியத் தொகையை வழங்க, கோர்ட் உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். மகன்கள் இருவரும் தலா ரூ.400யை தங்களது பெற்றோருக்கு வாழ்வாதார ஊதியமாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ...