
சென்னை: விபத்தில் இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருப்பதியை சேர்ந்தவர் நரேந்திர ரெட்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹேமந்த்குமார் ரெட்டி (20). சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த 10.3.2011 அன்று பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஹேமந்த்குமார் ரெட்டி மீது அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹேமந்த்குமார் ரெட்டி இறந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போதைய நீதிபதி ரவீந்திரபோஸ் ...