
சென்னை: குற்றவாளி என்று நினைத்து அப்பாவி சிறுவன் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி (37) என்பவர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கூலி வேலை செய்து, குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மகன் முக்கேஷ் (17), நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தான். நள்ளிரவு 11 மணிக்கு TN22G 0711 என்ற போலீஸ் வண்டியில் 4 ...