
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் சென்னையில் அளித்த பேட்டி: உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடுகளை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து தொடங்கிய இந்த பிரசார பயணம் கன்னியாகுமரியில் முடிவடைந்தது. மொத்தம் 1500 கி.மீ தொலைவு பயணம் செய்து விவசாயிகள் மற்றும் வணிகர்களை சந்தித்து பேசினோம். அவர்கள், உலக வர்த்தக ஒப்பந்தத்தால் பன்னாட்டு நிறுவனங்களுடன், போட்டி போட முடியாத அளவுக்கும் தொழிலை நடத்த முடியாத அளவுக்கும் கஷ்டப்பட்டு ...